வலுவிழந்தது புரெவி புயல்! அடுத்து என்ன நிகழும்? அமைச்சர் பேட்டி

 

வலுவிழந்தது புரெவி புயல்! அடுத்து என்ன நிகழும்? அமைச்சர் பேட்டி

புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்துள்ளார்.

வங்க கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை பாம்பன் – கன்னியாகுமரி இடையே தென் தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என இந்திய வனைலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் புயல் கரையை கடக்கும்போது பெரும் மழைக்கும் புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வலுவிழந்தது புரெவி புயல்! அடுத்து என்ன நிகழும்? அமைச்சர் பேட்டி

இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசியில் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “தற்போதைய நிலவரப்படி புயல் சின்னமானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்துள்ளது. பாம்பனுக்கு தென்மேற்கே 20கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் வலுவிழந்தது. இதனால் மழை பொழிவு இருக்கக் கூடும். காற்று லேசாக வீச வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.