புதிய கல்விக் கொள்கை எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்

 

புதிய கல்விக் கொள்கை எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் 34 ஆண்டுகள் பிறகு மாற்றம் செய்யப்படுவதால் பழைய கல்விக் கொள்கைக்கு மாறாக இது அமையும் என்றும் கூறப்படுகிறது. அதே போல, புதிய கல்விக் கொள்கையின் மூலம் 2030க்குள் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல மாற்றங்களுக்கு இது வழிவகுக்கிறது. ஆனால் இந்த கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. முதல்வர் பழனிசாமியும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்

இதனிடையே புதிய கல்விக் கொள்கையை குறித்து திமுக சார்பில் டி.ஆர் பாலு மனு அளித்தார். இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் – தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய கல்வி கொள்கை எந்த மொழியையும் எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கவில்லை என்றும் பயிற்று மொழியை அந்தந்த மாநிலங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து தான் ஏற்கனவே விளக்கி இருப்பதாகவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.