அதிகரிக்கும் அந்நிய முதலீடு – அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் !

 

அதிகரிக்கும் அந்நிய முதலீடு – அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் !

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 2810 கோடி டாலர் (ரூ.2,07 லட்சம் கோடி) அளவில் இந்தியா அந்நிய முதலீட்டை திரட்டி உள்ளது. இது தொடர்பாக பேசிய பியூஷ்கோயல், இந்தியாவில் புதிய முதலீட்டுக்கான சூழல் மேம்பட்டுள்ள நிலையில், அந்நிய முதலீடுகளின் வரவு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அதிகரிக்கும் அந்நிய முதலீடு – அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் !

கடந்த ஆண்டின், இதே காலகட்டத்தில் (ஜூலை -செப்டம்பர்) 1,406 கோடி டாலர் அன்னிய முதலீடு திரட்டப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்தியாவில் அந்நிய முதலீடு வளர்ச்சி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக தொழில்துறை நடவடிக்கைள் தேக்கம் அடைந்த நிலையிலும், அந்நிய முதலீடு வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் அந்நிய முதலீடு – அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் !

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் இருக்கிறது என, சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள்கள் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதானால் இந்தியாவில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர் என்றும் பியூஷ் கோயல் கூறினார். நடப்பு நிதியாண்டின் முதல், அரையாண்டில் இந்தியாவின் அந்நிய முதலீட்டு வளர்ச்சி 15 சதவீதமாக இருந்தது. சுமார் 2 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியது குறிப்பிடத்தக்கது.