“மதுரைக்கான ரூ.100 கோடியில் 90 கோடி திருமங்கலத்துக்கு சென்றிருக்கிறது” – முன்னாள் அமைச்சரை விளாசிய இந்நாள் அமைச்சர்!

“மதுரைக்கான ரூ.100 கோடியில் 90 கோடி திருமங்கலத்துக்கு சென்றிருக்கிறது” – முன்னாள் அமைச்சரை விளாசிய இந்நாள் அமைச்சர்!

தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டவங்களில் மதுரை முதன்மையானது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். உயிர் பலியும் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதனால் அரசு மதுரைக்கு பிரத்யேக கவனம் செலுத்தி வருகிறது. இச்சூழலில் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் திமுக அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தினார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளித்தார்.

“மதுரைக்கான ரூ.100 கோடியில் 90 கோடி திருமங்கலத்துக்கு சென்றிருக்கிறது” – முன்னாள் அமைச்சரை விளாசிய இந்நாள் அமைச்சர்!

அம்மனுவில் மதுரையின் கொரோனா பாதிப்புகள் குறிப்பிட்டிருந்த அவர், மதுரை மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளுக்கு அரசு பாரபட்சம் காட்டுவதாகக் கூறியிருந்தார். அதாவது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், கொரோனா தடுப்பூசிகள் போடாமல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதேபோல மற்றொரு முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜுவும் அரசை விமர்சித்திருந்தார். தற்போது இதற்கு மறுப்பு தெரிவித்து பேசியிருக்கிறார் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி.

“மதுரைக்கான ரூ.100 கோடியில் 90 கோடி திருமங்கலத்துக்கு சென்றிருக்கிறது” – முன்னாள் அமைச்சரை விளாசிய இந்நாள் அமைச்சர்!

இதுதொடர்பாகப் பேசிய அவர், “கொரோனா பரவல் குறித்து வெளிப்படையாக ஆலோசனை வழங்க மதுரை மாவட்டத்தில் இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்கும்படி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது வராமல் வெளியிடங்களில் முன்னாள் அமைச்சர்கள் அரசைத் தவறாக விமர்சிக்கின்றனர். கொரோனா தொற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினால், அதற்கு காரணமே முந்தைய அதிமுக அரசுதான். அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளில் மட்டும் கொரோனா தடுப்பு பணிகளில் பாரபட்சம் பார்ப்பதாக முன்னாள் அமைச்சர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“மதுரைக்கான ரூ.100 கோடியில் 90 கோடி திருமங்கலத்துக்கு சென்றிருக்கிறது” – முன்னாள் அமைச்சரை விளாசிய இந்நாள் அமைச்சர்!

2 நாட்களாக திருமங்கலம், மேலூர், மதுரை மேற்கு என அதிமுக எம்எல்ஏ.க்களின் தொகுதிகளில்தான் முழு வீச்சில் ஆய்வுப் பணிகள் நடக்கின்றன. அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுவதால், அதிமுக ஆட்சியில் நடந்த பாரபட்சம் குறித்து ஒரு தகவலை மட்டும் குறிப்பிடுகிறேன். தேர்தலுக்கு முன்பாக 100 நாள் வேலைக்காக மதுரை மாவட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. 10 தொகுதிகளுக்கான இந்தத் தொகையைச் சரியாகப்ப் பகிர்ந்தளிக்காமல் திருமங்கலம் (ஆர்பி உதயகுமார் தொகுதி) தொகுதிக்கு மட்டும் ரூ. 90 கோடியை ஒதுக்கி பாரபட்சமாக நடந்துகொண்டது அதிமுக அரசுதான்” என்றார்.