ஆவின் பால் விலை குறைப்பு… அரசுக்கு இத்தனை கோடி நஷ்டம் – அமைச்சர் சொல்லும் தகவல்!

ஆவின் பால் விலை குறைப்பு… அரசுக்கு இத்தனை கோடி நஷ்டம் – அமைச்சர் சொல்லும் தகவல்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, கடந்த 7ஆம் தேதி ஆட்சி அமைத்தது. மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற முதல் நாளே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், கொரனோ நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அதை உடனுக்குடன் அமல்படுத்தியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதில் ஆவின் பால் விலை குறைப்பும் ஒன்று.

ஆவின் பால் விலை குறைப்பு… அரசுக்கு இத்தனை கோடி நஷ்டம் – அமைச்சர் சொல்லும் தகவல்!

ஆவின் பால் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என தேர்தலின்போது மு.க ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனை தற்போது நிறைவேற்றியிருக்கிறார். கடந்த 16ம் தேதி முதல் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆவின் பால் விலை குறைப்பால் தமிழக அரசுக்கு 270 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் விலை குறைப்பு… அரசுக்கு இத்தனை கோடி நஷ்டம் – அமைச்சர் சொல்லும் தகவல்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சரியான முறையில் பெற்று விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. விலை குறைப்பால் 270 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் வகையில் உற்பத்தியை அதிகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், கொரோனா கால களப்பணியில் ஈடுபட்டு வரும் ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு 200 ரூபாய் கூடுதலாக அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.