கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை- அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை- அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

கிசான் திட்டத்தில் முறைகேடில் சம்பந்தப்பட்டவர்கள் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை- அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேளாண் துறையில் இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது. உழவர்சந்தை மீண்டும் புத்துயிர் பெறும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை விவசாயம் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஊரடங்கிலும் பொதுமக்கள் காய்கறிகளை எளிதில் பெற நடமாடும் காய்கறி கடைகள் திறக்கப்படும்” எனக் கூறினார்.