அதிமுக ஆட்சியை விட தினசரி ஒரு லட்சம் பேருக்கு கூடுதல் தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்ரமணியன்

 

அதிமுக ஆட்சியை விட தினசரி ஒரு லட்சம் பேருக்கு கூடுதல் தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்ரமணியன்

தடுப்பூசி போடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் வெள்ளை அறிக்கை விட்டும்படி எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “கொரோனா தடுப்பூசி விவரம் தினமும் பகிரப்பட்டு வருவதை எதிர்க்கட்சி தலைவர் பார்க்காமல் கேட்கிறார். கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான வெள்ளை அறிக்கை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்படும். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்படுகிறது.

அதிமுக ஆட்சியை விட தினசரி ஒரு லட்சம் பேருக்கு கூடுதல் தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்ரமணியன்

திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.61 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை 1.76 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1.80 கோடி கொரோனா தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன. தமிழகத்துக்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. 12 வயதுகுட்பட்ட 98 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது” எனக் கூறினார்.