“விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு” – அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

 

“விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு” –  அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தால் கடந்த 15ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

“விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு” –  அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் மீண்டும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன . அதேசமயம் திமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியுள்ளது. இருப்பினும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளது.அதேசமயம் திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இப்படி உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

“விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு” –  அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு, “6 மாநகராட்சிகள், 29 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தாமதமாகியுள்ளது; விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.தமிழ்நாட்டில் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க கழிவுநீரை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பணி துவங்கியுள்ளது; விரைவில் இத்திட்ட பணிகள் முழுமையாக விரிவுபடுத்தப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் ” என்றும் கூறினார்.