மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? – எல்.முருகனுக்கு கே.என்.நேரு பதிலடி!

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? – எல்.முருகனுக்கு கே.என்.நேரு பதிலடி!

தமிழகத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? – எல்.முருகனுக்கு கே.என்.நேரு பதிலடி!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடு. ஆளுங்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடு என ஸ்டாலின் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர். மேலும், டாஸ்மாக் கடை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் எல். முருகனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக் கடைகளைத் திறந்து விட்டு தமிழகத்தில் டாஸ்மாக்கை திறப்பதற்கு எதிர்க்கிறார்கள். அவர்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் அது தவறா? மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா என்று விமர்சித்தார்.

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? – எல்.முருகனுக்கு கே.என்.நேரு பதிலடி!

ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது போலவே டாஸ்மாக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், தடுப்பூசி குறித்து பேசிய அவர் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி வர வர உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தனி கவனம் செலுத்தி செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.