ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் மூலம் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்- அமைச்சர் காமராஜ்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மக்களுக்கு கூடுதல் அரிசி வழங்க ரூ,438 கோடி நிதி ஒதுக்கி மத்திய தொகுப்பிலிருந்து அரிசி வாங்கப்பட்டது. உணவுப்பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. இதுவரை சந்திக்காத சூழலை சந்தித்து கொண்டிருக்கிறோம். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் ஏப்ரல் மாதத்திற்கு 98% நபர்களுக்கு கொடுத்துள்ளோம். ஜூன் மாதத்திற்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தடை செய்யப்பட்ட 845 இடங்களில் 2 லட்சத்து 93 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ துறை மூலம் கொரோனா தொற்று வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள், குணப்படுத்தும் சிகிச்சை முறைகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக தான் உள்ளது.

தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் உணவு இல்லை, கிடைக்கவில்ல என்ற பிரச்சனை இல்லை சாப்பாடு கிடைக்கவில்லை என்ற பிரச்சனையும் இல்லை. 65 நாட்கள் மேலாக இருந்தாலும் அவர்களுக்கு சாப்பாடு கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே அரசின் மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்கான குறை சொல்லி வருகிறார், ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் மூலம் அரசியல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார். திமுக தலைவர் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது” எனக் கூறினார்.

Most Popular

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...

`வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!’- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் கணவனை மனைவி பிரிந்து சென்றார். தனியாக இருந்த கணவன் ஏரியா தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன்...

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...