ஹலோ ஸ்டாலின்… எதிர்க்கட்சித் தலைவராக நடந்துகொள்ளுங்கள்; எதிரிக்கட்சித் தலைவராக நடந்துகொள்ளாதீர்கள்- அமைச்சர் காமராஜ்

ஹலோ ஸ்டாலின்… எதிர்க்கட்சித் தலைவராக நடந்துகொள்ளுங்கள்; எதிரிக்கட்சித் தலைவராக நடந்துகொள்ளாதீர்கள்- அமைச்சர் காமராஜ்

திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “வேளாண் திருத்த சட்ட மசோதாக்களில் முதல் மசோதா ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ளது. இதன்மூலம் இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறாத வகையில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தமிழகத்தில் சட்ட மசோதாக்கள் அமல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால் அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கும்.

ஹலோ ஸ்டாலின்… எதிர்க்கட்சித் தலைவராக நடந்துகொள்ளுங்கள்; எதிரிக்கட்சித் தலைவராக நடந்துகொள்ளாதீர்கள்- அமைச்சர் காமராஜ்

நியாய விலைக் கடைகளில் பொருட்கள் பெறுவதில் எந்தவித பிரச்சனையும் கிடையாது குடும்ப அட்டை யார் வைத்து இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நடந்துகொள்ள வேண்டும் எதிரிக்கட்சித் தலைவராக நடந்து கொள்ளக்கூடாது. கொரோனா விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக ஸ்டாலின் எதை வைத்து கூறுகிறார். ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார்” எனக் கூறினார்.