தேவையில்லாதவர்கள் பற்றி பேச வேண்டாம்: சசிகலா வருகை குறித்து அமைச்சர் பதில்!

 

தேவையில்லாதவர்கள் பற்றி பேச வேண்டாம்: சசிகலா வருகை குறித்து அமைச்சர் பதில்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடத்தப்படவிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் முதல்வர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சசிகலா வருகை, ஜகா வாங்கும் தொண்டர்கள் என பல்வேறு பிரச்னைகள் அதிமுகவில் இருந்து வந்தாலும் அதை பொருட்படுத்தாது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

தேவையில்லாதவர்கள் பற்றி பேச வேண்டாம்: சசிகலா வருகை குறித்து அமைச்சர் பதில்!

சசிகலா வந்தால் அதிமுகவில் பூகம்பமே வெடிக்கும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. ஆனால், சசிகலா சென்னை வந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை ஒரு அதிமுக எம்.எல்.ஏ கூட அந்த பக்கம் சென்றதாக தெரியவில்லை. அதிரி புதிரியாக சென்னை வந்தடைந்த சசிகலா, தற்போது வரையில் மௌனம் காக்கிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு சசிகலா தனது வேலையே ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், சசிகலா வருகை குறித்த கேள்விக்கு பதிலளிக்க அதிமுக அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தேவையில்லாதவர்கள் பற்றி பேச வேண்டாம்: சசிகலா வருகை குறித்து அமைச்சர் பதில்!

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் சசிகலா வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது, தேவையில்லாதவர்கள் பற்றி பேச தேவை இல்லை என்பதால் யாரும் அவரை பற்றி பேசுவதில்லை என அமைச்சர் பதிலளித்தார்.

தொடர்ந்து ஸ்டாலினுக்கு வெற்று எனத்தான் தெரியும் என விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்டாலின் வெற்றிடத்தை நோக்கி செல்வதாக கூறினார். மேலும், தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறியதை முதல்வர் வெற்றிடமாக மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார்.