தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்?அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

 

தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்?அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் சூழலிலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், பயணிகள்,மால்கள், பூங்காக்கள் என அனைத்தும் செயல்பட அனுமதி அளித்த அரசு தியேட்டர்களை மட்டும் திறக்க அனுமதிக்கவில்லை. தியேட்டர்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், ஏசியுடன் செயல்பட்டால் கொரோனா பரவ அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அரசு காரணம் காட்டியுள்ளது.

தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்?அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

இதனால் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருப்பதோடு, திரைத்துறையினர் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, பல திரைப்படங்கள் ஒடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பின்னரே திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தியேட்டர்கள் திறக்கப்படும் போது மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்?அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

மேலும் ஆட்சியாக இருந்தாலும் கட்சியாக இருந்தாலும் இருமொழி கொள்கை தான் என தெரிவித்த அவர், மொழி தொடர்பான கொள்கையில் திமுக எந்த அளவில் இருக்கிறது என்பது அவர்களுக்குத்தான் தெரியும் என்றும் கூறினார்.