‘எல்லாரும் எம்ஜிஆரை போல ஆக முடியாது’ விஜய் போஸ்டர்கள் குறித்து அமைச்சர் பேட்டி!

 

‘எல்லாரும் எம்ஜிஆரை போல ஆக முடியாது’ விஜய் போஸ்டர்கள் குறித்து அமைச்சர் பேட்டி!

எம்ஜிஆரை போல நடிகர் விஜய்யை சித்தரித்து தேனியில் ஓட்டப்பட்ட போஸ்டர் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா உருவத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவையும், எம்ஜிஆர் உருவத்தில் விஜய்யையும் எடிட் செய்து போஸ்டர் ஓட்டப்பட்டு இருந்தது. விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் ரசிகர் மன்றம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் தேனியில் 2021 இல் தமிழகத்திற்கு தலைமை ஏற்க வர வேண்டும் 2ஆம் புரட்சி தலைவரே’ என குறிப்பிட்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர் கெட் அப்பில் விஜய்யின் உருவத்தை சித்தரித்து தேனியில் போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது.

‘எல்லாரும் எம்ஜிஆரை போல ஆக முடியாது’ விஜய் போஸ்டர்கள் குறித்து அமைச்சர் பேட்டி!

தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் போல போஸ்டர் ஒட்டினால் யாரும் எம்ஜிஆர் ஆகிவிட மாட்டார்கள் என கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் போஸ்டர்கள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

'எல்லாரும் எம்ஜிஆரை போல ஆக முடியாது' விஜய் போஸ்டர்கள் குறித்து அமைச்சர் பேட்டி!

அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் போல சித்தரித்து படம் போடுவதால் எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும் எம்ஜிஆர் போல் மக்கள் தங்களை நினைக்க வேண்டும் என்பதற்காக போஸ்டர்கள் அடித்து வருகின்றனர் என்றும் கூறினார். மேலும், டெபாசிட் வாங்க முடியாத கட்சிகள் கூட நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம், நாங்கள் தான் முதல்வர் என தேர்தல் வருவதற்குள் ஆயிரம் பேர் கூறுவார்கள் என்றும் அது நகைச்சுவையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.