தினகரன் நின்னா பயந்துடுவேனா? “யார் வேணுமானாலும் வரட்டும்” !!!

 

தினகரன் நின்னா பயந்துடுவேனா? “யார் வேணுமானாலும் வரட்டும்” !!!

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக கோவில்பட்டியில் போட்டியிடவுள்ளார். இதையடுத்து அவர் நேற்று கோவில்பட்டியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் . கோவில்பட்டியில் போட்டியிட்டாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லையார் . பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெற்றோம். 2011 சட்டமன்ற தேர்தலின்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றிபெற வைத்தனர்.

தினகரன் நின்னா பயந்துடுவேனா? “யார் வேணுமானாலும் வரட்டும்” !!!

கோவில்பட்டி பகுதியில் 50 ஆண்டு காலமாக இருந்த குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைத்ததுடன் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம்.தன்னிறைவு பெற்ற பகுதியாக கோவில்பட்டியை உருவாக்கியுள்ளோம். அதனால்தான் மனநிறைவோடு மூன்றாவது முறையும் இதே தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்னரே இப்பகுதி மக்கள் என்னை கோவில்பட்டியில் தான் போட்டியிட வேண்டும் என்று கூறினர். இங்கு நிச்சயமாக வெற்றி பெறுவோம். ” என்றார்.

தினகரன் நின்னா பயந்துடுவேனா? “யார் வேணுமானாலும் வரட்டும்” !!!

தொடர்ந்து பேசிய அவர், ” முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அத்தனை வாக்குறுதிகளையும் தற்போதைய அரசு நிறைவேற்றி உள்ளது. சிறந்த நகராட்சி என்ற பெயரில் வாங்கும் அளவிற்கு இங்கு பணிகள் செய்யப்பட்டுள்ளன. குடிமராமத்து , அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன” என்றார். முன்னதாக கோவில்பட்டியில் அமமுக சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். அதேபோல் இந்த தொகுதி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது