“ஓடிடி விவகாரத்தில் தமிழக அரசு துணை நிற்கும்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

“ஓடிடி விவகாரத்தில் தமிழக அரசு துணை நிற்கும்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக திரைத்துறையினருக்கு விரைவில் கலைமாமணி விருது வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“ஓடிடி விவகாரத்தில் தமிழக அரசு துணை நிற்கும்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் கிடப்பில் இருந்த பல படங்களை சில நடிகர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் ஓடிடி தளத்தில் வெளியிட்டன. திரையரங்கு மூடப்பட்டு கிடந்ததால் தயாரிப்பாளர்களின் பொருளதாரத்தின் அடிப்படையில் சில படங்கள் மட்டும் ஓடிடியில் வெளியாகின. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படும் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படமும் அடங்கும்.

இருப்பினும் இதற்கு தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தற்காலிக ஏற்பாடாக இருந்தால் நல்லது என்றும் ஓடிடியில் படங்கள் வெளியாவதை தடுப்பது பற்றி திரைப்படத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓடிடி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

“ஓடிடி விவகாரத்தில் தமிழக அரசு துணை நிற்கும்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, “கொரோனா காலகட்டத்தில் புதிய படங்கள் ஓடிடியில் வெளியானது. ஓடிடி விவகாரத்தில் தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர், விநியோகஸ்தர்கள் கூடி முடிவெடுக்க வேண்டும். ஓடிடி விவகாரத்தில் தமிழக அரசு துணை நிற்கும் . திருச்சியில் தியாகராஜ பாகவதர் மணி மண்டபம் கட்டும் பணி விரைவில் முடியும். விரைவில் கலைமாமணி விருது வழங்கப்படும் ” என்றார்.