பாமக தலைவர் விரக்தியாக பேசுவது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

 

பாமக தலைவர் விரக்தியாக பேசுவது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் புதிதாக கட்டப்பட உள்ள 3.78 கோடி மதிப்பிலான புதிய வட்டாட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கோட்டாட்சியர், தனப்பிரியா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “பாட்டாளி மக்கள் கட்சியுடன் நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் கூட்டணி வைத்திருந்த ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசுவது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாசுக்கு வழக்கம். தற்போது அவர் கூறிய கருத்துக்களுக்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் விமர்சனம் செய்வது போல் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்ததை விமர்சனம் செய்யும் விதமாக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் விரக்தியாக பேசுவது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

சென்னையில் ஒரு நாள் மழைக்கே மழைநீர் தேங்குவதாக மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவது இயல்பானது. சுனாமி பேரழிவு காலத்திலும் கஜா புயல் காலத்திலும் தமிழக அரசின் நடவடிக்கை சிறப்பாக இருந்தது என்பதை சினிமா பாணியில் சொல்வதென்றால் கமல்ஹாசன் பிளாஷ்பேக்காக அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

நடிகர் கமல்ஹாசன் ரைமிங்க சினிமாவிற்கு பேச நல்ல இருக்கும் ஆனால் அரசியலுக்கு நன்றாக இருக்காது. நடிகர் கமலஹாசன் மக்கள் வாழ்க்கைக்கு பொருந்தாத கருத்துக்களை ட்விட்டரில் கூறிவருகிறார். கொரோனாவை பார்த்து உலக நாடுகளே அச்சத்தில் உள்ளது. அந்த நிலையை அவர் உணர வேண்டும். தடுப்பு மருந்தினை யாரும் கண்டுபிடித்ததாக சொல்லவில்லை. அதற்கான முயற்சிகள் கடுமையாக உலகளவில் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவினால் ஒரு உயிர் இழப்பு கூட இருக்க கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தது மட்டுமின்றி, அதனை செய்தும் காண்பித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கு வராமல் சில தலைவர்கள் காணொலி காட்சி பெட்டிக்கு முன்பு மட்டும் இருந்து விட்டு 7 மாதங்களாக வெளியே வர பயப்படுகின்றனர். கொரோனா வந்த காலத்தில் இருந்து நடிகர் கமலஹாசனை யாரவது வெளியே பார்த்தீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.