சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர்!

சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர்!

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர்!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்திருந்தனர். அதன் படி இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு சாத்தான்குளத்துக்கு சென்று ஜெயராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி ரூ.25 லட்சம் நிதியுதவிக்கான காசோலையையும் வழங்கினார்.