“தேமுதிகலாம் சப்ப கட்சி… பாஜக, பாமக தான் கெத்து” – அமைச்சர் பாண்டியராஜன் பரபரப்பு பேச்சு!

“தேமுதிகலாம் சப்ப கட்சி… பாஜக, பாமக தான் கெத்து” – அமைச்சர் பாண்டியராஜன் பரபரப்பு பேச்சு!

இரு தினங்களுக்கு முன் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்தது. அந்த அறிவிப்பு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விஜயபிரபாகரன், சுதிஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மத்தியிலும் அதீத சந்தோஷம் எழுந்ததைக் காண முடிந்தது. ஆனால் தேமுதிகவின் முடிவு பாஜக கூட்டணிக்கு சற்று வருத்தத்தையே அளித்தது. இதனை பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்தனர். ஆனால் அதிமுக தலைவர்களிடம் அப்படி எதுவும் காணப்படவில்லை.

“தேமுதிகலாம் சப்ப கட்சி… பாஜக, பாமக தான் கெத்து” – அமைச்சர் பாண்டியராஜன் பரபரப்பு பேச்சு!

வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்டதையடுத்து அமைச்சர் க. பாண்டியராஜன் ஆவடியில் உள்ள பிரசித்திபெற்ற பச்சையம்மன் ஆலயம், திருமுல்லைவாயல் சிவன் கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியுள்ளதால் இதுவரை போட்டியியிட்டதை விட அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களது வலிமை என்ன என்பதை அறிந்து நாங்கள் சீட் வழங்கினோம். அதை ஏற்காமல் வேறு பாதையைத் தேடிச் சென்றுள்ளனர்.

“தேமுதிகலாம் சப்ப கட்சி… பாஜக, பாமக தான் கெத்து” – அமைச்சர் பாண்டியராஜன் பரபரப்பு பேச்சு!

அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்ல விரும்புகிறேன். அந்தக் கட்சி அவர்கள் பாதையில் போகட்டும்; நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம். அவர்களைவிட மிக மிக வலிமையான பாஜக, பாமக எங்களுடன் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் எங்களுடன் இருக்கும் என நம்புகிறோம். 300 கட்சிகளுக்குமேல் ஆதரவு அளித்துள்ளது. நல்ல கூட்டணி, வலிமையான கூட்டணி, மக்கள் நேசம் பெற்ற கூட்டணி” என்றார்.