“7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது” : அமைச்சர் ஜெயக்குமார்

“7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது” : அமைச்சர் ஜெயக்குமார்

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது” : அமைச்சர் ஜெயக்குமார்

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ” 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம். ஆனால் மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளுநர் கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை.ஆனால் திமுகவின் போராட்டத்தினால்தான் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது என பெயரை உருவாக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின். 7.5% இடஒதுக்கீடு வந்தால்தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்” என்றார்.

“7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது” : அமைச்சர் ஜெயக்குமார்

தொடர்ந்து பேசிய அவர், “வன்னியர் சமூகத்துக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்; அது தொடர்பாக அரசு முடிவெடுக்கும்” என்றுகூறினார்.

“7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது” : அமைச்சர் ஜெயக்குமார்

முன்னதாக 7.5% உள் இடஒதுக்கீடு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என்று ஆளுநர் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.