‘கொரோனா குறைவதால் தான் தளர்வுகள் தருகிறோம்’: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

 

‘கொரோனா குறைவதால் தான் தளர்வுகள் தருகிறோம்’: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மட்டுமே தளர்வுகள் அளிக்கப்படுவதால் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், தியேட்டர்கள் 50% இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. பொங்கல் பண்டிகை ரிலீசுக்கு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படமும், நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படமும் தயாராக இருப்பதால் நடிகர் விஜய் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. அதனை ஏற்று, 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்தது.

‘கொரோனா குறைவதால் தான் தளர்வுகள் தருகிறோம்’: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு எங்களை மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாக்குவதாக மருத்துவர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு, மனதை உருக்க வைத்தது. இதுவரை தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்காத அரசு, நடிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதும் அனுமதி வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

‘கொரோனா குறைவதால் தான் தளர்வுகள் தருகிறோம்’: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், தியேட்டர்களில் 100% ரசிகர்கள் அனுமதிக்க எதிர்ப்பு எழுந்துள்ளது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “கொரோனா குறைவதால் தான் தளர்வுகள் அளிக்கிறோம். இதற்கு முன்பு இப்படி ஒரு அறிவிப்பு கொடுத்தோமா? சுகாதாரத்துறை ஆலோசனைப் படியே அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன” என்று கூறினார்.