7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார்- அமைச்சர் ஜெயக்குமார்

 

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார்- அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைதாகி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இருப்பினும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட நிலையில், ஒருவார காலம் தமிழக ஆளுநருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார்- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “எழுவர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருகே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநரைச் சந்திக்கும் போதெல்லாம் எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளோம் என்று முதல்வரே தெரிவித்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என எப்போதும் 7 பேரை விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. குடியரசுத் தலைவரைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக தொடர்பாக ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளோம். திமுகவைப் போல் இரட்டை வேடம் போடவில்லை. ஒருவருக்கு மட்டும் தண்டனையைக் குறைக்க தீர்மானமும் போடவில்லை. அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றே நாங்கள் தீர்மானம் போட்டுள்ளோம்” எனக் கூறினார்.