‘முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக நிலைப்பாடு மாறாது’ – அமைச்சர் திட்டவட்டம்!

 

‘முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக நிலைப்பாடு மாறாது’ – அமைச்சர் திட்டவட்டம்!

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டாக வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ” முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவை பொறுத்தவரை எங்களது நிலைப்பாடு மாறாது. அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவித்து விட்டோம். யாராக இருந்தாலும் அதிமுக தலைமையின் கீழ் தான் வந்தாக வேண்டும். நாங்கள் அப்படி செல்லமாட்டோம், கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு, தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்படுகிறது” என்று கூறினார். மேலும், கூட்டணி விவகாரத்தில் பாஜக தேசிய தலைமை அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக நிலைப்பாடு மாறாது’ – அமைச்சர் திட்டவட்டம்!

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி விவகாரத்தில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகிறது. அதனால், வரும் 14ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வருகிறார். அவரது வருகையின் போது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நீடிக்கும் மோதல் குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.