அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி எம்ஜிஆரை இரவல் வாங்கக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார்

 

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி எம்ஜிஆரை இரவல் வாங்கக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார்

வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதிக்க ஆ. ராசா தயாரா? அப்படி தயார் என்றால் என் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ராசா என்ன ஐநா சபையா சான்றிதழ் அளிக்க? மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். விளம்பரத்திற்காக மட்டுமே ஆ ராசா பேசி வருகிறார். திமுக ஆட்சி ஒரு கானல் நீர் தான். மக்கள் அனைத்தையும் உணர்ந்து கொண்டுள்ளனர். 100% மதிப்பெண்ணை பெற்றது ஆட்சி அதிமுக தான், திமுக 35%க்கும் குறைவான மதிப்பெண்களை தான் பெற்றுள்ளது. ஆகவே 2021ல் அதிமுக மகத்தான வெற்றி பெறும்.

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி எம்ஜிஆரை இரவல் வாங்கக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார்

2ஜி வழக்குப்பற்றி எடப்பாடி பழனிசாமியுடன் ஆ. ராசா விவதிக்க வேண்டிய அவசியமில்லை. ராசாவின் தகுதிக்கு முதல்வருடன் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், வரும் திங்கட் கிழமை என் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறேன், வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதிக்க ஆ. ராசா தயாரா? ஜெயலலிதா மரண விவகாரத்தில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது கடமையை சரிவர செய்யும். உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்பதே அரசின் எண்ணம், எங்களுடைய நோக்கம் நிச்சயம் நிறைவேறும். எம்.ஜி ஆர்.பெயரை உச்சரித்தவர்கள் எல்லாம் எந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை, எம்.ஜி.ஆர்., அதிமுகவுக்கே சொந்தம்” எனக் கூறினார்.