சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

 

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் கட்டாயமாக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் மீன்வள பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்ற வாசகமும் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் என்ற வாசகமும் திமுகவிற்கு பொருந்தும். இனி கோட்டை திமுகவிற்கு கிடையாது.

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

கனிமொழி எடப்பாடியில் இருந்து பரப்புரை சென்றாலும் சரி, இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை சென்றாலும் சரி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் கண்டிப்பாக திமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும். திமுகவில் முன்னாள் பெண் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை. பூங்கோதை ஆலடி அருணாவிற்கே இந்த கதி என்றால் சாதாரண திமுக தொண்டனின் நிலை என்ன? ஏழுபேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அமித்ஷா வருகைக்கும் இன்று மாலை நடந்த அதிமுக மண்டல பொறுப்பாளர் கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை. பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர். அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் கட்டாயமாக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை” என தெரிவித்தார்.