மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்!

மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்!

7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நாளை வலியுறுத்துவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார். தமிழகம் வருகை தரும் அமித்ஷாக்கு சிறப்பான வரவேற்பை தர பாஜகவினர் முடிவெடுத்துள்ளனர். அதே சமயம், சட்டபேரவை தேர்தல், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேல் யாத்திரை, 7 பேர் விடுதலை என பல மாற்றங்களை கண்டு வரும் தமிழகத்தில் அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பாரக்கப்படுகிறது.

மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்!

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நாளை வலியுறுத்துவோம். 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் என்ற வாசகம் திமுகவிற்கு பொருந்தும். கனிமொழி எடப்பாடியில் இருந்து பரப்புரை சென்றாலும் சரி, இமயமலையிலிருந்து சென்றாலும் சரி கவலை இல்லை. மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.