“எம்ஜிஆர் பெயரைச் சொல்லி அதிமுக வாக்குகளை கலைக்க முடியாது” – கமலுக்கு அமைச்சர் பதிலடி!

 

“எம்ஜிஆர் பெயரைச் சொல்லி அதிமுக வாக்குகளை கலைக்க முடியாது” – கமலுக்கு அமைச்சர் பதிலடி!

எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி பரப்புரை செய்யும் கமல்ஹாசனால், அதிமுக ஓட்டுக்களை கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

“எம்ஜிஆர் பெயரைச் சொல்லி அதிமுக வாக்குகளை கலைக்க முடியாது” – கமலுக்கு அமைச்சர் பதிலடி!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தனித்து போட்டியிடுவேன் எனக்கூறிய கமல்ஹாசன் இப்போது ஆள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் மீது உண்மையான பக்தி கமலுக்கு இருந்திருந்தால் அவரை புரட்சித் தலைவர் என்று தானே அழைத்திருப்பார். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி அதிமுகவுக்கு விழும் ஓட்டை அவரால் சிதைக்க முடியாது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் வேறு எதற்கும் ஓட்டு போதாது எனக் காட்டமாக தெரிவித்தார்.

“எம்ஜிஆர் பெயரைச் சொல்லி அதிமுக வாக்குகளை கலைக்க முடியாது” – கமலுக்கு அமைச்சர் பதிலடி!

தொடர்ந்து போஸ்டரில் எம்ஜிஆர் படத்தை சின்னதாக்கியவர்கள் தான் தற்போது என்னை எதிர்க்கிறார்கள் என பரப்புரையின் போது கமல்ஹாசன் கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை விமர்சையாக நடத்திய அதிமுக தான் என்றும் கமல்ஹாசனால் இரண்டு, மூன்று அல்ல 4ஆவது அணியாக கூட வர முடியாது என்று கூறினார். மேலும், இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக் கொள்பவர்கள் என திமுவை விமரிசித்தார்.