“தோண்ட தோண்ட முறைகேடுகள்… அதிமுக அரசு வழங்கிய பயிர்க்கடனிலும் ரூ.516 கோடி மோசடி”

 

“தோண்ட தோண்ட முறைகேடுகள்… அதிமுக அரசு வழங்கிய பயிர்க்கடனிலும் ரூ.516 கோடி மோசடி”

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. அப்போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்துக் காட்டி பலமடங்கு கூடுதல் கடன் பெறப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக ரூ.516 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது” என்றார்.

“தோண்ட தோண்ட முறைகேடுகள்… அதிமுக அரசு வழங்கிய பயிர்க்கடனிலும் ரூ.516 கோடி மோசடி”

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அதிமுக தலைமையிலான சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அப்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், “கொரோனா, புயல் மற்றும் கடும் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் விதமாக ரூ.12, 110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்றார். 2016ஆம் ஆண்டு விவசாயக் கடனை அதிமுக அரசு தள்ளுபடி செய்த நிலையில் இரண்டாவது முறையாக விவசாய கடனை தள்ளுபடி செய்தது.

“தோண்ட தோண்ட முறைகேடுகள்… அதிமுக அரசு வழங்கிய பயிர்க்கடனிலும் ரூ.516 கோடி மோசடி”

இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்த தொடர் கோரிக்கையால்தான் ஆளுங்கட்சியான அதிமுக பயிர்க்கடன் அறிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் ஸ்டாலின் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நகைக்கடன், பயிர்க்கடன், கல்விக்கடன் என அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்ததால் தான் எடப்பாடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு ஸ்டாலினுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.