‘சுங்க வசூல் நிறுத்தம்’… சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ வேலு அதிரடி அறிவிப்பு!

 

‘சுங்க வசூல் நிறுத்தம்’… சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ வேலு அதிரடி அறிவிப்பு!

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சுங்க வசூல் வரும் 30ம் தேதியோடு நிறுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ.வேலு திட்டங்களை அறிவித்தும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகிறார். அந்த வகையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் 140 மீட்டர் நீளத்திற்கு கடல்சார் பாலம் அமைக்கப்படும். கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 1.50 கோடி செலவில் நினைவிடம் கட்டப்படும். முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். ரூ.350 கோடி நிதியில் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய திட்டம் கொண்டுவரப்படும். தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.

‘சுங்க வசூல் நிறுத்தம்’… சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ வேலு அதிரடி அறிவிப்பு!

மேலும், வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சுங்க வசூல் நிறுத்தப்படுகிறது என்றும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால் பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.