ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு என்ன ஆயிற்று? – சிவி சண்முகம் பதில்

 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு என்ன ஆயிற்று? – சிவி சண்முகம் பதில்

விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டணி என்பது வேறு மக்களின் பிரச்சினை என்பது வேறு விதமாகவே பார்க்கிறது. அதிமுக அரசு தமிழகத்தின் எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்காது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் ஆணை பிறப்பிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தோம்.. அவர் தெரிவிக்காத நிலையில் தமிழக அரசு தனி சட்டம் கொண்டுவந்தது. ஜெயலலிதா மரணம் குறித்து ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று கொடுத்திருக்கிறது. அதன்விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைநிலுவையில் உள்ளது. இதற்கு முதல்வரும் துணை முதல்வரும் காரணமல்ல.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு என்ன ஆயிற்று? – சிவி சண்முகம் பதில்

7 பேரின் விடுதலை பற்றிப் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது. அது மட்டுமில்லாமல் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசுவதற்கும் திமுகவினருக்கு எந்த அருகதையும் கிடையாது. திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது நீட் தேர்வு தொடர்பாக ஒரு நிலைபாடும் எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது. நீட் தேர்வை கொண்டுவருவதற்கு முழுமுதற் காரணம் திமுக ஆட்சிதான்.நீட்டுக்குத் தடை கோரிய நிலையில் அதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து முதல்வர் பழனிசாமி அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5% தீர்மானத்தைக் கொண்டுவந்த ஒரே முதல்வர் பழனிசாமிதான்.” என தெரிவித்தார்.