அதிமுக கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு- சிவி சண்முகம்

 

அதிமுக கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு- சிவி சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் தொண்மையான கல்மரபடிகங்களை பாதுகாக்கும் வகையில் 123 ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புவியியல் பூங்கா உள்ள அமையவுள்ள இடத்தில் நடைபெற்ற பூமி பூஜையை அமைச்சர் சிவி சண்முகம் தொடங்கிவைத்தார்.

அதிமுக கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு- சிவி சண்முகம்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், “சசிகலா இன்று டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வரும் நிலையில் விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ ரகுபதி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா என போஸ்டர் அடித்தது எல்லாம் ஒரு பெரிய விஷயமா? நான் நினைத்தால் நாளைக்கே சசிகலா ஒழிக என ஒரு லட்சம் போஸ்டர் ஒட்ட முடியும். 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் காலவரையறை கெடு கொடுத்துள்ளது. 7 பேர் விடுதலை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் முதலமைச்சர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடுப்போம்” எனக் கூறினார்.

முன்னதாக பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையிலிருந்து சென்றபோது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணித்தார். அந்த காரில் அதிமுக கொடி பறக்கவிட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.