அரசின் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

 

அரசின் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

கொரோனாவை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்பி ஜோதிமணியும் பங்கேற்றார்.

அரசின் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

அக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி பெல் ஆலையில் கைவிடப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், உதிரிப் பாகங்கள், துணைகருவிகள் கிடைக்காததால் ஆலை மூடப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் தொடங்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம். மக்களின் தேவையை நிறைவேற்றுவதில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறோம். அரசின் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.