செப்டம்பர் 1ல் பள்ளிகளை திறக்க தயார் – அமைச்சர் அன்பில் மகேஷ்

 

செப்டம்பர் 1ல் பள்ளிகளை திறக்க தயார் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு செப்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளை திறக்க அரசு தயாராக உள்ளது. 14 மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆசியர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

செப்டம்பர் 1ல் பள்ளிகளை திறக்க தயார் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவாக உள்ளது. அதையே தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். அதற்கான சட்ட ரீதியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகின்றன. கடந்த முறையை விட இந்த முறை பதிவு செய்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. விண்ணப்பித்திற்கான தேதியை நீட்டித்துள்ளோம். அதிகமாக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார். மேலும், ஆசிரியர்களுக்கு பயிற்சி என்பது மாவட்டம் வாரியாக ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.