12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?.. தீவிர ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ்

 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?.. தீவிர ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சிபிஎஸ்இ தேர்வின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?.. தீவிர ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ்

இத்தகைய சூழலில் தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கருத்து கேட்பு நடத்துமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் படி, வாட்ஸ்அப் மூலம் நேற்று முதல் கருத்துக்கள் பெறப்பட்டது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

பெற்றோர்களிடமும் கல்வியாளர்களிடமும் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, கருத்து கேட்பின் அறிக்கையை முதல்வரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சமர்ப்பிக்கவுள்ளார். அதனடிப்படையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்பதை முதல்வர் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ் அப் மூலம் பெறப்பட்ட கருத்துக் கேட்பில், 60% பேர் தேர்வை நடத்தலாம் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.