‘தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான்’ மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் திட்டவட்டம்!

 

‘தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான்’ மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் திட்டவட்டம்!

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் மத்திய அரசுக்கு /எழுதிய கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர். மத்திய கல்வித்துறை அமைச்சர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதியக் கல்விக் கொள்கை தொடர்பாக எல்லா மாநிலங்களிடமும் மனம் திறந்து கருத்து கேட்கப்படும் என்றும் ஆலோசனை கேட்டு சந்தேகங்கள் தீர்க்கப்படும் என கூறினார்.

‘தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான்’ மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் திட்டவட்டம்!

மத்திய அரசு என்னதான் கூறினாலும் புதிய கல்விக் கொள்கை மும்மொழி கல்வியை வலியுறுத்துவதால் அதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்த அவர், புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.