எங்கே செல்கிறது சென்னை – ஊரடங்கில் மனதை உறைய வைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

 

எங்கே செல்கிறது சென்னை – ஊரடங்கில் மனதை உறைய வைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

அயனாவரம் அதிர்ச்சி

ஊரடங்கில் பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை சென்னையில் நடந்துள்ள சம்பவங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. சென்னை, அயனாவரத்தில் குடியிருந்து வரும் மூதாட்டிக்கு வயது 63. இவரின் கணவர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக வாழ்ந்து வருகிறார். இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவர்கள் இன்று உயிரோடு இல்லை. வயதான காலத்தில் கணவனை கவனித்தப்படி மூதாட்டி கிடைத்த வேலைகளை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எங்கே செல்கிறது சென்னை – ஊரடங்கில் மனதை உறைய வைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மூதாட்டியின் வீட்டில் ஒருவர் மட்டுமே தூங்க முடியும். அந்தளவுக்கு சிறிய அறையில்தான் கணவரும் மனைவியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் வழக்கம் போல மூதாட்டி அந்தத் தெருவில் தனக்கு தெரிந்தவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். சிறிய அறை என்பதால் கதவை திறந்து வைத்து விட்டு அவர் தூங்கியுள்ளார். 19-ம் தேதி அதிகாலை மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு மர்ம நபர் ஒருவர் வந்தார்.

பாலியல் வன்கொடுமை

திறந்து கிடந்த கதவை பூட்டினார். பிறகு மூதாட்டிக்கு அந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால் திடுக்கிட்டு கண்விழித்த மூதாட்டி அருகில் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே எழுந்து மின்விளக்கை ஆன் செய்ய மூதாட்டி எழும்ப முயற்சி செய்தார். ஆனால் அருகில் கிடந்த மர்ம நபர், மூதாட்டியை எழும்ப விடாமல் கட்டிப்பிடித்துள்ளார். அதனால் மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். உடனே மர்ம நபர், மூதாட்டியின் வாயை பொத்தியுள்ளார். அதனால் அவரால் சத்தம் போட முடியவில்லை.

எங்கே செல்கிறது சென்னை – ஊரடங்கில் மனதை உறைய வைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

இதையடுத்து அந்த நபர், மூதாட்டியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூதாட்டியோ முடிந்தளவுக்கு போராடி தோல்வியடைந்துள்ளார். அதன்பிறகு மூதாட்டியை கடுமையாக தாக்கிய மர்மநபர், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகு சத்தம்போட்டுள்ளார் மூதாட்டி. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கண்விழித்தனர். பிறகு மூதாட்டி படுத்திருந்த அறைக்குச் சென்றனர். அங்கு ஆடைகள் கிழிந்த நிலையில் வாய், உதடுகளில் காயங்களுடன் இருந்த மூதாட்டியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.

புகார் கொடுக்க மறுப்பு

அப்போது அவர் நடந்தச் சம்பவத்தை கூறியதும் அந்தப்பகுதி முழுவதும் பொதுமக்கள் சல்லடைப் போட்டு தேடினர். ஆனால் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து அயனாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்தனர். அப்போது அவர் தயங்கினார். தான், கடந்த 8 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேலைப்பார்த்துள்ளேன். அதனால் அங்கு சென்று சிகிச்சை பெற்றால் எனக்கு நடந்த கொடுமை அனைவருக்கும் தெரிந்துவிடும். அந்த அவமானத்தில் நான் சாவதை தவிர வேறு வழியில்லை என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

 

 

 

எங்கே செல்கிறது சென்னை – ஊரடங்கில் மனதை உறைய வைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

இதையடுத்து மூதாட்டியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து புகாரளிக்கும்படி போலீசார் மூதாட்டியிடம் கூறினர். அப்போது அவர், நான் புகார் கொடுத்தால் என் பெயர் தெரிந்துவிடும் எனவே இந்தச் சம்பவம் குறித்து புகாரளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அதனால் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர். சென்னை அயனாவரத்தில் ஆதரவற்ற மூதாட்டிக்கு நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டாலும் புகார் கொடுக்காததால் போலீசார், சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

காதல்

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் கொடூரம் மறைவதற்குள் சென்னை திருநின்றவூரில் பெற்ற மகள் உள்பட 2 சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த கயவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருநின்றவூரைச் சேர்ந்தவர் ரம்யா. (பெயர் மாற்றம் )இவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். கணவனுக்கும் ரம்யாவுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ரம்யா, கேட்டரிங் வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார்.

 

இந்தச் சமயத்தில்தான் ரம்யாவுக்கும் திருநின்றவூரைச் சேர்ந்த முரளிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரைப்பிரிந்த ரம்யாவுக்கும் மனைவியில்லாமல் 16 வயது மகளுடன் வாழ்ந்த முரளிக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் குடியிருந்தனர். மகளை ரம்யா, பாட்டி வீட்டில் விட்டு விட்டு முரளியுடன் குடும்பம் நடத்திவந்துள்ளார். இந்தச் சமயத்தில் ரம்யாவை பிரிந்து வாழ விரும்பாத 13 வயது மகள், திருநின்றவூருக்கு வந்தார். பின்னர் ரம்யா, தன்னுடைய 13 வயது மகளுடனும் முரளி, தன்னுடைய 16 வயது மகளுடனும் அண்ணாநகர் கம்பர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர்.

பெற்ற மகளுக்கும் காதலியின் மகளுக்கும்

காலையில் வேலைக்குச் செல்லும் ரம்யா, இரவில்தான் வீட்டுக்கு வருவார். அதனால் வீட்டில் தனியாக இருந்த ரம்யாவின் மகளிடம் அன்பாக பழகியுள்ளார் முரளி. அதைப்போல தன்னுடைய 16 வயது மகளுடனும் முரளி அப்பா முறை தவறி தவறாக நடந்துள்ளார். தன்னுடைய மகளுக்கும் ரம்யாவின் மகளுக்கும் வேண்டியதை வாங்கி கொடுத்து அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தியுள்ளார் முரளி. இந்த நட்பு ரம்யாவுக்கு தெரியாமல் மாதக்கணக்கில் தொடர்ந்துள்ளது.

எங்கே செல்கிறது சென்னை – ஊரடங்கில் மனதை உறைய வைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
முரளி

இரண்டு பேரிடமும் வெளியில் சொன்னால் ரம்யா மற்றும் உங்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவந்துள்ளார். அதனால் முரளிக்கு பயந்த 2 சிறுமிகளும் அமைதியாக இருந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லவில்லை. இந்தச் சமயத்தில் ஊரடங்கு காரணமாக ரம்யா வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது தன்னுடைய மகளுடன் முரளி பழகுவது பேசுவதைக் கவனித்த ரம்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

யார் இந்த முரளி

இதையடுத்து மகளிடம் விசாரித்த ரம்யாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முரளியின் சுயரூபத்தை மகள் ஒன்றுவிடாமல் கூறினர். அதனால் ரம்யா, முரளியின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். மகளை அழைத்துக் கொண்டு கடந்த 18-ம் தேதி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் லதாவிடம் முரளியால் தன்னுடைய மகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து விரிவாக புகாராக எழுதி கொடுத்தார்.

இதையடுத்து ரம்யாவின் மகளிடம் ஆவடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்தார். அப்போது முரளி தன்னிடம் மட்டுமல்லாமல் அவரின் சொந்த மகளிடம் கூட தவறாக நடந்ததை கூறினாள். அதனால் விசாரணைக்கு முரளியின் சொந்த மகளும் அழைக்கப்பட்டார். அவரிடமும் போலீசார் விசாரித்த போது முரளியின் சுயரூபம் வெட்ட வெளிச்சமானது. ரம்யா வீட்டில் இல்லாத நேரத்தில் 2 சிறுமிகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

எங்கே செல்கிறது சென்னை – ஊரடங்கில் மனதை உறைய வைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

அதனால் முரளியை போலீசார் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர் .பின்னர் முரளியிடம் விசாரித்த போது 2 சிறுமிகள் கூறியது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து முரளியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து ஆவடி மகளிர் போலீசார் கூறுகையில், முரளி, இறைச்சி கடை வைத்துள்ளார். இவரின் மனைவி இறந்துவிட்டதால் 16 வயது மகளுடன் வசித்து வந்தார். அப்போதுதான் ரம்யாவுடன் முரளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரம்யாவுக்கு மூன்று குழந்தைகள். ரம்யாவும் முரளியும் அவரின் 16 வயது மகளும் என மூன்று பேர் மட்டுமே திருநின்றவூரில் குடியிருந்துள்ளனர். அதன்பிறகுதான் ரம்யாவின் மகள்கள், மகனும் இங்கு வந்துள்ளனர்.

குடிபோதையில் வீட்டுக்கு வரும் முரளி, பெற்ற மகள், ரம்யாவின் மகள் ஆகியோரிடம் தவறாக நடந்துள்ளார். முரளி மீது ஏற்கெனவே திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. மேலும் தண்டையார் பேட்டை இரட்டை கொலை வழக்கும் உள்ளது. இதுதவிர திருநின்றவூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி முரளி. தற்போது மகள், காதலி மகள் என 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும் முரளி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட முரளி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய உள்ளது என்றனர்.

பூட்டிய அறைக்குள்

அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வீட்டை விட்டு ஓடிய பேத்திக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக பாட்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தபோது, வீட்டை விட்டு ஓடிய சிறுமி பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது திருத்தணியிலிருந்து வேலைக்காக சென்னை வந்த வெங்கடேஷ் (21) என்பவர் சிறுமியிடம் பேசியுள்ளார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு வெங்கடேஷ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை அறையில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வீட்டிலிருந்து தப்பிய சிறுமி, திருத்தணி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

எங்கே செல்கிறது சென்னை – ஊரடங்கில் மனதை உறைய வைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

ஊரடங்கு என்பதால் ரயில்கள் இயக்கப்படவில்லை. அதனால் சிறுமி திருத்தணி ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்துள்ளார். அதைக் கவனித்த ரயில்வே போலீசார் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போதுதான் சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதுள்ளார். அதனால் சிறுமியை மீட்ட ரயில்வே போலீசார் அயனாவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வெங்கடேஷ் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாகினார். அவரை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தைரிய சிறுமி

சென்னை பெரவள்ளூரில் கடைக்கு நடந்துச் சென்ற 11 வயது சிறுமி மீது மயக்க மருந்து தெளிந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக செம்பியம் அனைத்து மகளிர் போலீசார் ஹரிபாபு என்ற ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். சிறுமியின் துணிச்சலால் ஹரிபாபுவிடமிருந்து அவர் தப்பினார். இவ்வாறு தலைநகர் சென்னையில் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, தொல்லையால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

எங்கே செல்கிறது சென்னை – ஊரடங்கில் மனதை உறைய வைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
ஹரிபாபு

இதில் தொடர்புடையவர்கள் மீது போக்சோ சட்டங்கள் பாய்ந்தாலும் கொரோனா ஊரடங்கிலும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பெற்றோர்கள் அச்சமடைகின்றனர். எனவே, பெரவள்ளூர் சிறுமியைப் போல பிரச்னைகளை மற்ற சிறுமிகளும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தெரிந்தவர்களே குற்றவாளி

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், எங்களிடம் வரும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறோம். பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு கவுன்சலிங் அளிக்கிறோம். அதோடு இந்தச் சமுதாயத்தில் தைரியத்தோடு எப்படி வாழ வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறோம். பெரும்பாலும் சிறுமிகள், தங்களுக்கு தெரிந்த நபர்களால்தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அதனால் தவறான கண்ணோட்டத்தில் தங்களை தொடுபவர்கள் குறித்த தகவல்களை பயப்படாமல் பெற்றோரிடம் கூற வேண்டும். மேலும் பெற்றோர்களும் தங்களின் மகள்களுக்கு ஆறுதல்களையும் அதே நேரத்தில் தைரியத்தையும் கூறி உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் புகார் கொடுக்க தயங்கினாலும் குடும்ப கௌரவம் கருதி சம்பவத்தை மறைத்தாலும் சம்பந்தப்பட்ட நபரால் இன்னொரு சிறுமி, குழந்தை பாதிக்கப்பட நீங்கள் காரணமாகிவிடுகிறீர்கள். சென்னை செம்பியம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்த ஆட்டோ டிரைவர் ஹரிபாபு, இதற்கு முன்பும் சில சிறுமிகளிடம் அநாகரீகமாக நடந்துள்ளார். .ஆனால் அவர்கள் புகார் கொடுக்காத தைரியத்தில் தொடர்ந்து அதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சென்னை தைரிய சிறுமி கொடுத்த புகாரால் ஆட்டோ டிரைவர் ஹரிபாபு மீது நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது என்றனர்.

-எஸ். செல்வம்