“ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது” – மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முயற்சி!

“ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது” – மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முயற்சி!

மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

1962 ஆம் ஆண்டு முதல் 2011 வரை ராணுவ ஆட்சி இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மியான்மரில் தேர்தல் நடைபெற்றது இதில் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று அரியணை ஏறியது. இந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவுபெற்ற கட்சிகள் எல்லாம் தோல்வியை தழுவின. ஆனால் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டிய நிலையில் அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ராணுவத்தின் புகாரை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகேடுகள் இன்றி சரியான முறையிலே நடந்ததாக தெரிவித்தது.

“ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது” – மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முயற்சி!

இதைத்தொடர்ந்து ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுத்தது. அதிபர் வின் மைன்ட் மற்றும் ஆளும் கட்சியின் முக்கிய தலைவரான ஆங் சான் சூச்சி இருவரும் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில் திடீர் கைது நடவடிக்கையால் மியான்மரில் பதற்றம் தொற்றிக் கொண்டது. தலைநகர் மற்றும் முக்கிய நகரான யாங்கூனின் வீதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பல முக்கிய நகரங்களில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

“ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது” – மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முயற்சி!

இந்நிலையில் மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை காவலில் வைத்துள்ள நிலையில் மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மியான்மர் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.