தாஜ்மஹால் கட்டமைப்பில் உருவான மைக்ரோசாப்ட் அலுவலகம்… பிரமிக்க வைக்கும் அழகு!

 

தாஜ்மஹால் கட்டமைப்பில் உருவான மைக்ரோசாப்ட் அலுவலகம்… பிரமிக்க வைக்கும் அழகு!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முழுக்க முழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் அதன் உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டட வடிவமைப்பில் ஈர்க்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் அமையவிருக்கும் புதிய ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தை வடிவமைத்திருக்கிறது.

தாஜ்மஹால் கட்டமைப்பில் உருவான மைக்ரோசாப்ட் அலுவலகம்… பிரமிக்க வைக்கும் அழகு!

அமெரிக்காவில் இருக்கும் நிறுவனத்தின் தலைமையிட கட்டடத்திற்குப் பிறகு மிகப் பிரமாண்டமான முறையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரில் ஆராய்ச்சி மையத்தை மைக்ரோசாப்ட் கட்டமைத்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் தனது ஆராய்ச்சி மையத்தை அமைத்திருந்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிய மையம் அமைக்கப்பட்டதால், அங்குள்ள பாரம்பரிய சின்னமான தாஜ்மஹாலின் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் முதல் பொறியியல் மையமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தாஜ்மஹால் கட்டமைப்பில் உருவான மைக்ரோசாப்ட் அலுவலகம்… பிரமிக்க வைக்கும் அழகு!

இதுதொடர்பாக நிறுவனத்தின் ஆசிய பிராந்திய இயக்குநர், “நாங்கள் வடிவமைத்ததிலேயே மிகவும் அழகான வடிவமைப்பு என்றால் புதிதாக நொய்டாவில் திறக்கப்பட்டிருக்கும் எங்களின் அலுவலகம் தான். எங்களின் குழு நாங்கள் நினைத்தை விட அதிகமாக உழைத்து சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். உற்பத்தியை அதிகரித்து வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், செயற்கை நுண்ணறிவு (AI), புதிய கேமிங் பிரிவு ஆகிய துறைகளை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த மையம் அமையும்” என்றார்.

இதுதொடர்பான வீடியோவையும் அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் மிகப் பிரமாண்டமாகவும், கண்களைக் கொள்ளை கொள்ளும் அளவில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் ரம்யமாகவும் காட்சியளிக்கிறது.