’என் அப்பாவே ரியல் பில்கேட்ஸ்’ இறந்த அப்பா பற்றி மைக்ரோ சாஃப்ட் பில்கேட்ஸ்

’என் அப்பாவே ரியல் பில்கேட்ஸ்’ இறந்த அப்பா பற்றி  மைக்ரோ சாஃப்ட் பில்கேட்ஸ்

’பில்கேட்ஸ்’ எனும் ஒற்றைப் பெயர் உலகின் பலருக்கு உத்வேகத்தை அளிக்கும். கணினியில் இந்த உலகின் யாரும் கனவிலும் நினைத்திராத அற்புதங்களை நனைவில் செய்துகாட்டியவர் பில்கேட்ஸ்.

1975 ஆம் ஆண்டில் தன் நண்பரோடு ஆரம்பித்த மைக்ரோ சாஃப்ட் நிறுவனம்தான் இன்று அவரை உலகின் முதன்மையான பணக்காரர் வரிசையில் இடம்பெற வைத்திருக்கிறது.

’என் அப்பாவே ரியல் பில்கேட்ஸ்’ இறந்த அப்பா பற்றி  மைக்ரோ சாஃப்ட் பில்கேட்ஸ்

பில்கேட்ஸின் இந்தத் திறமை அவரின் சின்ன வயதிலிருந்து வந்தது. அவரின் அப்பா வில்லியம் ஹென்றி கேட்ஸ், தன் மகனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டு வளார்த்தெடுத்தவர்.

ஹென்றி வில்லியம் கேட்ஸ்  ஒரு வழக்கறிஞர். அந்த நகரத்தின் புகழ்பெற்ற வழக்குகளை நடத்தியவர். மேரி மேக்ஸ்வெல்லைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்தவர்தான் இன்று உலகமே கொண்டாடும் பில் கேட்ஸ். மேரி பள்ளி ஆசிரியை.

’என் அப்பாவே ரியல் பில்கேட்ஸ்’ இறந்த அப்பா பற்றி  மைக்ரோ சாஃப்ட் பில்கேட்ஸ்

தன் மகன் கேட்கும் அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்தவர். மேலும், நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தியவர். அவையே பில்கேட்ஸின் பல அறிவியல் சந்தேகங்களுக்கு விடை அளித்தனர்.

நேற்று பில்கேட்ஸின் அப்பா, ஹென்றி வில்லியம் கேட்ஸ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. அவரைப் பற்றிய ஒரு கட்டுரையை பகிர்ந்துகொண்டிருக்கிறார் பில்கேட்ஸ். அப்போது அதில், ‘ரியல் பில்கேட்ஸ் என் அப்பாதான். அவரை ஒவ்வொரு நாளும் மிஸ் பண்ணுவதாக உணர்வேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.