”நவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”!

 

”நவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வரும் 3ம் தேதி ”இன் தொடர் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போன்கள் குறித்து எந்த தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. இதனிடையே இந்த புதிய போன்கள் குறித்து அந்நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா கூறுகையில், இந்த போன்களின் விலை 7 ஆயிரத்தில் தொடங்கி 25000 ரூபாய் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த போன்கள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும் இதில் எந்த ஒரு விளம்பரமும் வராது என்றும் கூறி உள்ள அவர், வாடிக்கையாளர்களின் டேட்டா தங்கள் நிறுவனத்திற்கு வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

”நவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”!

இதனிடையே இந்த போன்களின் சிறப்பம்சங்கள் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, இந்த போன்கள், இரண்டு வகைகளில் வெளிவரும் என்றும் அதில் ஒன்று ஹீலியோ மீடியா டெக் ஜி 35 பிராசசரும், மற்றொன்று, ஹீலியோ மீடியா டெக் ஜி 85 பிராசசரும் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், 6.5 இன்ச் எச்டி பிளஸ் திரை மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 5000 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஜி85 பிராச சர் கொண்ட போனில் மட்டும் பின்புறத்தில் மூன்று கேமராவும், மற்றொரு போனில் பின்புறம் இரண்டு கேமராவும் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்