‘எம்ஜிஆரின் புகைப்படத்தை அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் பயன்படுத்த கூடாது’ : அதிமுக வைகைச் செல்வன்

‘எம்ஜிஆரின் புகைப்படத்தை அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் பயன்படுத்த கூடாது’ : அதிமுக வைகைச் செல்வன்

எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்த முழு உரிமை கொண்ட ஒரே இயக்கம் அதிமுகதான் என்று அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள பாஜக அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.. அதேசமயம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தொடர்ந்து கூறிவருகிறார். இதனால் அதிமுக பாஜக கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒன்றிணைந்து களம் காணும் என்பது தெளிவாகிறது.

‘எம்ஜிஆரின் புகைப்படத்தை அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் பயன்படுத்த கூடாது’ : அதிமுக வைகைச் செல்வன்

அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வெற்றிவேல் யாத்திரை தொடங்கும் என அறிவிப்பு வெளியானது. இதற்கான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில், ‘பொன்மனச்செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா” என்ற வரி இடம்பெற்றதுடன் பாஜக கொடியில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் புகைப்படமும் இருந்தது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘எம்ஜிஆரின் புகைப்படத்தை அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் பயன்படுத்த கூடாது’ : அதிமுக வைகைச் செல்வன்

இது குறித்து பதிலளித்த எல்.முருகன்,’ எம்ஜிஆர் தமிழக மக்களுக்கு நல்லது செய்து இருக்கிறார். அவரை போலவே மோடியும் நல்லது செய்து வருகிறார்.பெண்கள் மத்தியில் எம்ஜிஆருக்கு நல்ல ஆதரவு உள்ளது .அதை போல் மோடியும் பெண்கள் மத்தியில் ஆதரவு பெற்ற ஒருவராக திகழ்கிறார்’ என்று பதிலளித்தார்.

‘எம்ஜிஆரின் புகைப்படத்தை அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் பயன்படுத்த கூடாது’ : அதிமுக வைகைச் செல்வன்

இந்நிலையில் எல். முருகனின் இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன்,c என்றும் எம்ஜிஆரின் கொள்கைக்கு மாறாக இருக்கும் கட்சிகள் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜகவினர் எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவது, அதிமுக கூட்டணியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.