மேட்டூர் அணை நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

 

மேட்டூர் அணை நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 45 ஆயிரம் கன அடியாக உள்ளது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மேட்டூர் அணை நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

இதைத் தொடர்ந்து இரு அணைகளிலிருந்தும் உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. 60 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழக – கர்நாடக எல்லையான புலிக்குட்டிக்கு தற்போது 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!
இன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் 70.05 அடியாக உள்ளது. அணைக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. காவிரியிலிருந்து டெல்டா பாசனத்துக்காக 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 32.74 டி.எம்.சி தண்ணீர் தற்போது மேட்டூர் அணையில் இருப்பு உள்ளது.