‘இந்த நாள் மட்டும்’ காலை 5.30 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

 

‘இந்த நாள் மட்டும்’ காலை 5.30 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

நவ.2ம் தேதி மட்டும் மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணிக்கே தொடங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

‘இந்த நாள் மட்டும்’ காலை 5.30 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

கொரோனா பொது முடக்கத்தால் முடக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இந்த மாதம் தொடக்கத்தில், மீண்டும் தொடங்கியது. ஆரம்பத்தில் குறைந்த நேரத்திலேயே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு நேரம் நீட்டிக்கப்பட்டது. மேலும், அவ்வப்போது மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி தொடர் விடுமுறை காரணமாக காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையில் ரயில்கள் இயக்கப்பட்டன.

‘இந்த நாள் மட்டும்’ காலை 5.30 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

இந்த நிலையில், நவம்பர் 2ம் தேதி அதாவது வரும் திங்கள் கிழமை மட்டும் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணிக்கு பதில் 5.30க்கே தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக, 2ம் தேதி காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.