‘தடை செய்யப்பட்ட பகுதி’ ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் கடையை திறந்த வியாபாரிகள்!

‘தடை செய்யப்பட்ட பகுதி’ ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் கடையை திறந்த வியாபாரிகள்!

சமயபுரத்தில் ஆட்சியர் உத்தரவை மதிக்காமல், வியாபாரிகள் இன்று வழக்கம் போல கடைகளை திறந்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வரும் சூழலில், காவலர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சி அலுவலக பணியாளர் ஒருவருக்கும் சமயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக, செப்.28 ஆம் தேதி முதல் அக்.5ஆம் தேதி வரை சமயபுரத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக ஆட்சியர் சிவராசு அறிவித்தார்.

‘தடை செய்யப்பட்ட பகுதி’ ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் கடையை திறந்த வியாபாரிகள்!

அதன் படி, நேற்று அப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ஆட்சியரின் உத்தரவு பின்பற்றப்பட்டது. இந்த நிலையில், உத்தரவு போடப்பட்ட 2ம் நாளான இன்று வியாபாரிகள் அனைவரும் மீண்டும் கடையை திறந்து வழக்கம் போல வியாபாரத்தை தொடங்கினர். இது குறித்து பேசிய வியாபாரிகள், சமயபுரத்தில் இருக்கும் பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோவில் வழக்கம் போல திறந்திருக்கும் என அறிவித்த ஆட்சியர், கடைகளை மட்டும் மூட வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் அப்படி பார்த்தால் இங்கிருக்கும் டாஸ்மாக் அனைத்தும் திறந்தே தான் இருக்கிறது என்றும் கூறினர்.

‘தடை செய்யப்பட்ட பகுதி’ ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் கடையை திறந்த வியாபாரிகள்!

மேலும், கோவிலுக்கு இன்று அதிமாக பக்தர்கள் வரும் நிலையில் மக்களுக்கு அத்தியாவசியமான கடைகளை திறக்கக் கூடாதா எனவும் நியாமான கேள்வியை முன்வைத்தனர்.