“மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்” : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 

“மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்” : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்” : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திராவிட முன்னேற்ற கழகத்தின் வாயிலாக 50 ஆண்டுகால அரசியல் வரலாறு ஐந்து முறை முதல்வராக பல சிறப்பம்சங்களைக் கொண்ட அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. எழுத்தாளர் ,வசனகர்த்தா, அரசியல் வித்தகர் என பன்முகம் கொண்ட கருணாநிதிக்கு தூக்கு மேடை நாடகத்தின் போது எம் ஆர் ராதா கலைஞர் என்ற பட்டத்தை அளித்தார்.இந்திய அரசியலில் மிக முக்கிய பங்கு வகித்த மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி தனது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் நாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் . அவரது உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதிமுக அரசு மறுப்பு தெரிவித்தது. இருப்பினு உடனடியாக சட்டப்போராட்டம் நடத்தி திமுக பெற்றது அவரது இறப்பையும் வரலாற்று சாதனையாக்கியது.

“மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்” : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.39 கோடி செலவில் 2.21 ஏக்கரில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.கருணாநிதி நினைவிடத்தில் அவரின் வாழ்க்கை சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது; இந்திய அரசியலை வழிநடத்தி அரசியல் ஞானி கலைஞர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தவர். 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர். 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர்; தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை.என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை” என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.