உத்தர பிரதேசத்தில் பள்ளி கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த பெற்றோர்கள்

உத்தர பிரதேசத்தில் பள்ளி கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த பெற்றோர்கள்

உத்தர பிரதேசத்தில் பள்ளி கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரி பெற்றோர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பள்ளிகள் செயல்படவில்லை. இருப்பினும் சில பள்ளிகள் பள்ளி கட்டணத்தை வசூலித்து வருவதாக தகவல். உத்தர பிரதேசத்தில் சில பள்ளிகள் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு கல்வி கட்டணத்தை செலுத்தும்படி மாணவர்களின் பெற்றோர்களை வலியுறுத்தி வருகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் பள்ளி கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த பெற்றோர்கள்
உண்ணாவிரத போராட்டத்தில் காசியாபாத் பெற்றோர்கள்

காசியாபாத்தில் நேற்று முதல் பெற்றோர்கள் சங்கத்தினர், கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான பள்ளி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகளின் மாவட்ட கண்காணிப்பாளர் பள்ளி கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

உத்தர பிரதேசத்தில் பள்ளி கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த பெற்றோர்கள்
பள்ளிகள் இயங்கவில்லை

இது தொடர்பாக காசியாபாத் பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர் சீமா தியாகி கூறுகையில், தங்களது குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு உண்ணாவிரத்தில் மக்கள் அமர்ந்துள்ளனர். பள்ளிகளின் மாவட்ட கண்காணிப்பாளர் உள்பட அதிகாரிகள் யாரும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளையும் நிறுத்தி விட்டன. ஆகையால் கட்டணங்களும் வசூலிக்க கூடாது. எங்கள் கோரிக்கைள் நிறைவேறும் வரை நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என தெரிவித்தார்.