வெளிநாட்டுக்கு தப்பியோடிய இந்திய தொழிலதிபதிபருக்கு ஜாமீன் மறுப்பு – டொமினிகா நீதிமன்றம் அதிரடி!

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இந்திய தொழிலதிபதிபருக்கு ஜாமீன் மறுப்பு – டொமினிகா நீதிமன்றம் அதிரடி!

இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரியான மெகுல் சோக்ஸி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்றுள்ளார். அதனைத் திருப்பிச் செலுத்தாமல் 2018ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து எஸ்கேப் ஆகி ஆன்டிகுவாவில் தங்கியிருந்தார். இதற்கு முன்பாகவே உஷாராக 2017ஆம் ஆண்டு அந்நாட்டில் குடியுரிமை பெற்றிருக்கிறார். இவரை இந்தியாவிற்கு அழைத்துவர சிபிஐயும் அமலாக்க துறையும் ஆன்டிகுவா அரசிடம் முறையிட்டது. அதன் பொருட்டு குடியுரிமையை ரத்துசெய்தது. ஆனால் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றிகண்டார்.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இந்திய தொழிலதிபதிபருக்கு ஜாமீன் மறுப்பு – டொமினிகா நீதிமன்றம் அதிரடி!

இதனால் ஆன்டிகுவாவிலேயே தங்கியிருந்தார். இச்சூழலில் கடந்த 23ஆம் தேதி ஜாலி ஹார்பருக்கு மெகுல் சோக்ஸி சென்றார். அப்போதிருந்து மெகுல் சோக்ஸியைக் காணவில்லை என அவரின் குடும்பத்தார் போலீஸிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன் டொமினிகா நாட்டில் அவர் பிடிபட்டார். விசாரணையில் ஆன்டிகுவாவிலிருந்து தப்பிய அவர் டொமினிகாவிலிருந்து கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்திருக்கிறது.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இந்திய தொழிலதிபதிபருக்கு ஜாமீன் மறுப்பு – டொமினிகா நீதிமன்றம் அதிரடி!

தற்போது டொமினிகா நாட்டு காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மெகுல் சோக்ஸியை ஏற்க மாட்டோம் என ஆன்டிகுவா பிரதமர் பிரவுன் அறிவித்துள்ளார். அதேசமயம் மெகுல் சோக்ஸியை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்காக தனி விமானமும் அங்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சூழலில் இதுதொடர்பான வழக்கு நேற்று டொமினிகா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மெகுல் சோக்ஸி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் நபர் என்பதால் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என டொமினிகா அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இந்திய தொழிலதிபதிபருக்கு ஜாமீன் மறுப்பு – டொமினிகா நீதிமன்றம் அதிரடி!

ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின்படி, வெளிநாட்டு குடியுரிமையைப் பெறும் இந்தியர்கள் அவர்களின் இந்திய குடியுரிமை அந்தஸ்தை இழப்பார்கள் என்பதால் அவரை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என மெகுல் சோக்ஸி வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதிட்டார். இதனிடையே மெகுல் சோக்ஸி தரப்பில் ஜாமீன் கோரி டொமினிகா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக மெகுல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.