ஆயுதங்களை எடுப்பதை தவிர காஷ்மீர் இளைஞர்களுக்கு வேறுவழியில்லை.. மெகபூபா முப்தி சர்ச்சை பேச்சு

ஆயுதங்களை எடுப்பதை தவிர காஷ்மீர் இளைஞர்களுக்கு வேறுவழியில்லை.. மெகபூபா முப்தி சர்ச்சை பேச்சு

ஆயுதங்களை எடுப்பதை தவிர காஷ்மீர் இளைஞர்களுக்கு வேறுவழியில்லை என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி அண்மையில்தான் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் காஷ்மீருக்கான கொடி மீண்டும் நடைமுறைப்படுத்தாத வரை தேசிய கொடியை ஏற்றவோ, பிடிக்கவோ மாட்டேன் மற்றும் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் புதிய சர்ச்சையை மெகபூபா முப்தி ஏற்படுத்தியுள்ளார்.

ஆயுதங்களை எடுப்பதை தவிர காஷ்மீர் இளைஞர்களுக்கு வேறுவழியில்லை.. மெகபூபா முப்தி சர்ச்சை பேச்சு
மெகபூபா முப்தி

ஸ்ரீநகரில் நேற்று மெகபூபா முப்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தியது மற்றும் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியது முதல் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. இந்த காலத்தில்தான் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 10 முதல் 15 இளைஞர்கள் தீவிரவாதத்தில் இணைகின்றனர்.

ஆயுதங்களை எடுப்பதை தவிர காஷ்மீர் இளைஞர்களுக்கு வேறுவழியில்லை.. மெகபூபா முப்தி சர்ச்சை பேச்சு
சீனா, பாகிஸ்தான்

ஏனென்றால் நீங்கள் மக்களின் குரலை அடக்கியுள்ளதால், மக்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. சிறைக்கு செல்லலாம் அல்லது ஆயுதங்களை எடுக்கலாம் என்று இளைஞர் சிந்திக்கிறார். எனவே ஆயுதங்கள் எடுத்து இறப்பதே நல்லது என்று நினைக்கிறார். ஏனென்றால் நீங்கள் மக்களை பேச அனுமதிக்கவில்லை. நாம் சீனாவுடன் பேச முடிந்தால், நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச முடியாது? எங்கள் நிலத்தை எங்களுக்கு வழங்குமாறு நாம் சீனாவிடம் மன்றாடி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.