நாம் தமிழர் கட்சியில் இணைந்த மீரா மிதுன்!

 

நாம் தமிழர் கட்சியில் இணைந்த மீரா மிதுன்!

தமிழில் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீராமிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன், நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் குறித்து அவதூறு பரப்பிவந்தார். அதுமட்டுமின்றி அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுவந்ததால் நெட்டிசன்கள் அவரை வசைப்பாடி வந்தனர். அதனால் மீரா மிதுன் என இருந்த தனது ட்விட்டர் பக்கத்தை தனது உண்மையான பெயரான தமிழ் செல்வி மணி என மாற்றிவைத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இணைந்த மீரா மிதுன்!

அண்மையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை மீரா மிதுன், “நான் ஒரு தேசிய கட்சியில் இணைந்திருக்கிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பை அக்கட்சி நிர்வாகிகள் வெளியிடுவார்கள்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சீமானுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மீரா மிதுன், “அவரால் மட்டுமே முடியும்… மிக தமிழ் உணர்வு உள்ளவர்… மிக விரைவில்! உங்களுடன் தமிழ் சொந்தங்களே @NaamTamilarOrg” எனக் குறிப்பிட்டுள்ளார்.