கொரோனா விளைவுகள் – டெல்லியில் பல மடங்கு அதிகரித்து வரும் மருத்துவக் கழிவுகள்

 

கொரோனா விளைவுகள் – டெல்லியில் பல மடங்கு அதிகரித்து வரும் மருத்துவக் கழிவுகள்

கொரோனா நோய்த் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளாலும் கொரோனா நோய்ப் பரவலை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு பரவலானது. அன்றிலிருந்து இன்றுவரை புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.

கொரோனா விளைவுகள் – டெல்லியில் பல மடங்கு அதிகரித்து வரும் மருத்துவக் கழிவுகள்

இந்திய அளவில் நோய்த் தொற்றலில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளது. எனவே, நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. அதனால் மருத்துவக் கழிவுகளும் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது.

புது டெல்லியில் தினசரி 372 டன் அளவுள்ள மருத்துவக் கழிவுகள் உருவாகுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லியைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே கொரோனா நோய்த் தொற்று அதிகரித்த வண்ணம் இருந்தது. இதில் சமீப சில நாட்களாக மாநில அரசின் கடும் முயற்சிகளால் நோய்த் தொற்று சற்று குறைந்துள்ளது.

கொரோனா விளைவுகள் – டெல்லியில் பல மடங்கு அதிகரித்து வரும் மருத்துவக் கழிவுகள்

இந்நிலையில் டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளும் மற்ற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் தினமும் பல டன் மருத்துவக் கழிவுகள் சேர்ந்துவருகின்றன என்று மத்திய சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

2020 மே மாதத்தில் தினசரி 25 டன் மருத்துவக் கழிவுகள் சேர்ந்த நிலையில் ஜூன் மாதத்தில் 349 டன் எடையுள்ள மருத்துவக் கழிவுகள் சேர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.